ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த படைவீரர் மீது பீராங்கி வாகனம் ஏறியதில் உயிரிழந்துவிட்டார்.
இங்கிலாந்தின் உள்ள வில்ட்ஷயரில் அருகில் டெவிசெஸுக்கு 10 மைல் தூரத்தில் சாலிஸ்பரி என்ற சமவெளி உள்ளது. இந்த சமவெளியில் ராணுவ பயிற்சி நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் ‘பயிற்சியில் ஈடுபட்டிருந்த படைவீரர் மீது பீராங்கி வாகனம் ஏறியதில் அவர் உயிரிழந்துவிட்டார்’ என்று பிரித்தானியா ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் தீயணைப்பு குழுவினர், மீட்பு சேவை பியூசி, லட்கர்ஷாலில் இருந்து 2 தீயணைப்பு இயந்திரங்கள், ட்ரோபிரிட்ஜில் இருந்து ஒரு கனரக மீட்பு போன்றவை வரவழைக்கப்பட்டு அதன் பின்னரே மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் வில்ட்ஷயர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடயவியல் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளதால் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியைச் சுற்றி ஸ்பாட்லைட்கள் அமைத்துள்ளனர். குறிப்பாக சாலிஸ்பரி சமவெளியில் ராணுவ பயிற்சி மட்டும் தான் நடைபெற்றதா என்பது குறித்து வில்ட்ஷயர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் விரைவில் தகவல் தெரிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.