அமெரிக்காவில் எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவால் நினைவாற்றல் பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மூன்று மாதம் மற்றும் இருபத்து நான்கு மாதம் வயதுகளுடைய எலிகளில் ஓகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுத்து எலிகளின் நினைவாற்றல் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் இளம் எலிகளுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படாததும், வயதான எலிகளுக்கு நினைவாற்றல் குறைந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோல் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், பஸ்தா, உருளைக்கிழங்கு சீவல், நொறுக்கு தீனிகள், பீசா உள்ளிட்டவை வயதானவர்களின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்துள்ளது.