தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 3,5,8,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு போக்க நவம்பர் 12 ஆம் தேதி NAS திறனறித் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற உள்ள தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.