தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாவட்டங்களில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை விரைவு படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மாநில சராசரியாக 45 விட குறைவான மக்களுக்கு தடுப்பூசி போட்டு உள்ள மாவட்டங்கள் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.