வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா துர்க்கை பூஜை பந்தல்களிலும், கோவில்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் துர்க்கையின் சிலை வைத்தும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குமிலா மற்றும் வேறு சில இடங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த வதந்தியை நம்பி இந்துக்கள் மீது திடீர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் காயமடைந்ததாகவும், பொது சொத்துக்களும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து “இந்த வன்முறைத் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டரீதியாக தண்டனை வழங்கப்படும்” என்று வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.