பலூன் போட்டிக்கான உலகக்கோப்பையில் பெரு நாட்டைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.
உலகில் முதல் முறையாக ஸ்பெயின் நாட்டில் பலூன் போட்டிக்கான உலககோப்பை நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை டர்ராகோனாவில் இருக்கும் ஸ்பெயினின் இணைய பிரபலங்களான Ibai Llanos மற்றும் fc barcelona அணியின் வீரரான gerard pique ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பெரு நாட்டைச் சேர்ந்த Francesco de la என்பவர் பட்டம் வென்றுள்ளார்.
குறிப்பாக அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த Anotonio, Diego மற்றும் Isbel Arredondo ஆகியோர் டிக்டாக் செயலியில் பலூன் வைத்து விளையாடி அதனை பதிவேற்றம் செய்தனர். இது இணையத்தில் வைரலாகிய பிறகு தான் ஸ்பெயினில் உலகக்கோப்பை போட்டியாக விளையாடத் தொடங்கியுள்ளனர்.