ஜெர்மனியில் மூன்று கட்சிகள் இணைந்து புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜெர்மனியின் அடுத்த அதிபராக மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் (SPD) கட்சியின் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சிறிய கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் SPD, Greens மற்றும் வணிக சார்பற்ற சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தான் புதிய ஆட்சியை ஏற்படுத்தப் போகின்றனர்.
இது குறித்து அந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இணைந்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையானது 12 பக்கங்களை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ” நாங்கள் ஒரு லட்சியம் மற்றும் சாத்தியமான கூட்டணி ஒப்பந்தத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதனை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
இந்த பேச்சுவார்த்தை மிகவும் மரியாதை, நல்லுறவு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. இதனையே நாங்கள் பின் தொடர விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூன்று அரசியல் கட்சிகளின் பேச்சுவார்த்தைகளும் அடிப்படை மாற்றத்திற்கான தேவைகளை சுட்டிக்காட்டி முன்னோக்கி செல்லும் பாதையை எடுத்துரைப்பது போன்று இருந்தது.