தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மத்திய மேற்கு,வட மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது. அதனைப் போலவே மற்றொரு காற்றழுத்த தாழ்வு. பகுதி அரபிக் கடலில் உருவாகி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது.
இதனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன்படி நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நிலக்கரி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். மேலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் சில லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.