ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்னை மெரினாவுக்கு புறப்பட்டார் சசிகலா.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை நாளை தொடங்க இருக்கிறது.. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து வந்தது.. அதன்படி இன்றைய தினத்தில் சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா மெரினா புறப்பட்டுள்ளார்.. அங்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி விட்டு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.. ஜெயலலிதா நினைவிடம் முன்பு அவர் ஒரு சில நிமிடங்கள் தரையில் அமர்ந்து அமர்ந்து தியானம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
சசிகலாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர் செல்லும் வாகனத்துக்கும் முன், பின் மற்றும் அவரது வாகனம் சேர்த்து மொத்தம் 4 வாகனம் மட்டுமே செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.. காவல் துறை சார்பாக அதே போன்று அவர் வரக்கூடிய வழியில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.. ஜெயலலிதாவின் நினைவிடம் எம்ஜிஆர் நினைவிடம், அண்ணா நினைவிடத்திலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே சசிகலா தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளன.. ஆகவே இந்த தினத்தில் இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு சசிகலா தனது இல்லத்திற்கு மீண்டும் செல்கிறார்.. இது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே 2017 பிப்ரவரி மாதம் சிறை செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தோழி சசிகலா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..