மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை நாளை தொடங்க உள்ளது .. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து நிலவி வந்தது..
இந்நிலையில் இன்று காலை சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா சென்னை மெரினாவுக்கு சென்று, அங்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு அழுதபடியே அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அங்கு சுற்றி அமமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் நிறைய பேர் கூடியிருந்தனர்.. அதனை தொடர்ந்து சசிகலா மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்..
முன்னதாக சசிகலா தரப்பில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளன.. இந்த நிகழ்வு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே 2017 பிப்ரவரி மாதம் சிறை செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தோழி சசிகலா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ., நினைவிடத்தில் வி.கே.எஸ்
மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு, அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வி.கே.சசிகலா வந்தடைந்தார்.
ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். pic.twitter.com/hOHPlAFoqt
— பாஸ்கர் பாண்டியன் | Baskar Pandiyan (@BaskarPandiyan3) October 16, 2021