Categories
தேசிய செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய தசரா ஊர்வலம்… சாமுண்டீஸ்வரி தேவியை தூக்கிக் வீரநடை நடந்த யானை… மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சி…!!!

தசரா திருவிழாவில் சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து யானை ஊர்வலமாக கொண்டு சென்றது.

உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக தசரா திருவிழா இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் மைசூர் அரண்மனையில் மட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவின் போது விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. விழாவின் உச்ச நிகழ்வான தசரா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது.

முன்னதாக அரண்மனையில் பல்வேறு பூஜைகள், கத்திபோடும் நிகழ்ச்சி என அனைத்தும் நடந்தது. இதனை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி தேவியை அபிமன்யு என்ற யானை 150 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சுமந்து வீர நடை போட்டு வந்தது. ஒட்டகப் படை ,யானைப் படை, போலீசார் அணிவகுப்பு, கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி என வெகு விமரிசையாக நடைபெற்ற ஊர்வலத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

Categories

Tech |