Categories
சினிமா தமிழ் சினிமா

அமலா பாலின் அடுத்த படத்திற்கு சென்சார் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

‘ஆடை’ படத்தின்மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நடிகை அமலா பால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் சென்சார் வேலைகள் முடிந்துள்ளது.

நடிகை அமலா பால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழிலில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது.

Image

ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லால் நடித்திருந்த காரணத்தினால் அப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.அதன்பின் படம் வெளியான பின்பும் கலவையான விமர்சனத்தையே சந்தித்து. இதைத் தொடர்ந்து அமலா பால் தற்போது ஹிந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதனிடையே புதுமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நீண்டநாட்களாக தள்ளிப்போனது. இதனிடையே இத்திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததால் படத்திற்கு “யு” சான்றிதழ் கிடைத்துள்ளது.காட்டில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண் எவ்வாறு அங்கிருந்து தப்பித்து வருகிறர் என்பதே இந்தப் படத்தின் கதை. லிப்ரா புரெடக்ஷன் தயாரித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/LMKMovieManiac/status/1191978428121178112

Categories

Tech |