சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து ஏற்கனவே கூறியிருந்தபடி, இன்று அம்மா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவால் அதிமுகவில் எந்த விதமான பிளவையும் ஏற்படுத்த முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைதான் அம்மா என்று மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நானும் அம்மா தான் என்று சசிகலா சொல்லி வந்தால், அதை மற்றவர்கள் பார்த்து கேலியாக சிரிக்கின்ற நிலைமை தான் ஏற்படும்.
அம்மா அம்மா தான். மத்ததெல்லாம் சும்மாதான். எந்தவித சட்ட உரிமையும் இல்லாமல் அதிமுக கொடியையும், பொதுச்செயலாளர் என்ற பெயரையும் சசிகலா பயன்படுத்தி வருகிறார். அவரை எதிர்த்து போராட்டம் செய்து அவரை பெரிய ஆளாக ஆக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.