Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடிநபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிறை வந்ததையடுத்து வருகின்ற 19ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் அன்று மது விற்பனை செய்யக்கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் முக்கியமான அரசு விடுமுறை நாட்களில் மது கடைகள் தடை விதிக்கப்படும். அதன்படி மிலாடி நபி என்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மிலாடிநபி அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு விதி மீறி விற்பனை செய்பவர்கள் மீது மதுபான சில்லரை விற்பனை விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் மிலாடி நபி முன்னிட்டு ஏற்கனவே மது விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலின் காரணமாக மதுக்கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை தடை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |