Categories
சினிமா தமிழ் சினிமா

அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்…. எதிர்ப்புகள் காரணமாக கைவிட முடிவு….? வெளியான புதிய தகவல்….!!

சங்கர் இயக்கிய ”அந்நியன்” படத்தை இந்தியில் ரீமேக் செய்வதை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் முன்னணி கதாநாயகனாக உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ”அந்நியன்”. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அம்பி, ரெமோ, அந்நியன்.. ஆக்டிங்கில் பிரித்து மேய்ந்த விக்ரம்.. டிரெண்டாகும்  #15YrsOfMegaBBAnniyan | #15YrsOfMegaBBAnniyan trending in twitter! - Tamil  Filmibeat

இதனையடுத்து, இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏனென்றால், இந்த படத்தின் கதையின் உரிமை என்னிடம் உள்ளது எனவும், என்னுடைய அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது எனவும் கூறினார். இதற்கு பதிலளித்த சங்கர், அந்நியன் படத்தின் கதை என்னுடையது. எனவே, இந்தியில் ரீ-மேக் செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றார். இதனையடுத்து, திரைப்பட வர்த்தக சபையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை செய்ய வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக்கை கைவிட இருப்பதாகவும், இந்த படத்திற்கு பதிலாக வேறு கதையில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கலாம் எனவும் சங்கர் திட்டமிட்டு வருவதாக, சமூக வளைதளத்தில் தகவல் பரவி வருகிறது

Categories

Tech |