Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்…. பிடிபட்ட ஆட்கொல்லி புலி…. நீலகிரியில் பரபரப்பு…!!

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு புலியை வனத்துறையினர் பிடித்து விட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஸ்ரீ, மதுரை போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்த புலி 4 பேரை அடித்து கொன்று விட்டது. இந்நிலையில் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்குடி பகுதியில் புலி சாலையை கடந்தபோது வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தினார். ஆனாலும் புலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதனையடுத்து மசினகுடி சோதனை சாவடிக்கு அருகில் இருக்கும் வனப்பகுதியிலிருந்து எருமை மாடுகள் வேகமாக ஓடி வந்துள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது புலி மாட்டை அடித்து தின்று கொண்டிருந்தது. அதன் பிறகு மீண்டும் வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தியதால் அது மயங்கி விழுந்து விட்டது. இதனையடுத்து புலியானது இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டு கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு புலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |