இந்திய பசு மாடுகளில் தங்கம் உற்பத்தி ஆகின்றது என்று பாஜக MP திலீப் கோஷ் பேசியதை சமூகவலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தின் புர்த்வான் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக MP திலீப் கோஷ் , இந்திய நாட்டு மாடுகளின் திமிலில் தங்கமணி உள்ளது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த திமில் மீது சூரிய ஒளி படும் போது அது பசுவின் உடலில் தங்கத்தை உற்பத்தி செய்கிறது என்றும் பலரையும் உறைய வைத்தார்.இதனாலேயே இந்திய நாட்டு பசுவின் பால் மஞ்சள் நிறமாக உள்ளது என்றும் பாரதிய ஜனதா MP திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். இதனை ஆர்எஸ்எஸின் கொல்கத்தா மாநில செயலாளர் விஷ்ணு பாசு ஆமோதித்துள்ளார்.
இதனிடையே திலீப் கோஷ் வெளிநாட்டு இன மாடுகள் உண்மையில் மாடுகள் அல்ல என்றும் அவைகள் ஒரு வகையான மிருகங்களின் என்று தனது சர்சை பேச்சில் MP திலீப் கோஷ் தெரிவித்தார். வெளிநாட்டு மாடுகள் தாய்கள் அல்ல என்றும் அவைகள் அத்தைகள் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். பால் என்பது ஒரு முழுமையான சரிவிகித உணவு என்றும் அதைக் குடித்தே ஒருவர் உயிர் வாழ முடியும் என்றும் தெரிவித்தார்.வெளி நாட்டு மாடுகளை வணங்குதல் நாட்டுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.இதுவரை சமூக வலைதளங்களில் பலரும் பலவாறாக கிண்டல் செய்து வருகின்றனர்.