Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. மாணவர்களை துன்புறுத்தினால் நடவடிக்கை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் , மாணவர் ஒருவர் வகுப்பை கட் அடித்ததாக கூறி, மாணவனை கரும்பலகையின் கீழே முட்டி போட வைத்த இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன், கையில் வைத்திருந்த பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவரை காலால் எட்டி உதைத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் யாரும் துன்புறுத்தக் கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |