Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் வென்ற வேட்பாளர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் கட்டளை…!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடித வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே உள்ளாட்சி அமைப்புகளே ஆகும். ஒரு மரம் வளர ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற கூடிய மக்களின் பிரதிநிதிகளாக, மக்களின் வேலைக்காரர்களாக வேலைசெய்து  ஊழியம் செய்திட வேண்டும். கடந்த 1996ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெருமையை சென்னை வாழ் மக்கள் வழங்கிய போது தலைவர் கருணாநிதி சொல்லிய வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை ‘இது பதவியல்ல பொறுப்பு’ என்பதாகும்.

ஆகவே நம் உயிருக்கு நிகரான தலைவர் கூறிய வார்த்தைகளை  நெஞ்சில் பதிய வைத்து தொடர்ந்து உழைத்து வரும் உங்களில் ஒருவன் ஆகிய நான் முதலமைச்சர் என்பதை ஒரு பதவியாக எண்ணாமல் பொறுப்பு என்று எண்ணுகிறேன். எனவே  மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை நம் மனிதில் வைத்து செயலாற்றிட வேண்டும். மேலும் மக்களின் ஆதரவு எப்போதும் நம் பக்கம் தான்.  ஆகவே நாம் மக்களின் நலம் பெறும் வகையில் தொடர்ந்து செயலாற்றி நல்ல ஆட்சி புரிய வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

Categories

Tech |