Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவன் தான் காரணம்…. வக்கீலுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் வழக்குப்பதிவு….!!

முன்விரோததால் வக்கீலை கொலை மிரட்டல் விடுத்த கட்சி நிர்வாகி உள்பட 13 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனகநந்தல் கிராமத்தில் வக்கீல் செம்மலை என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் அதே ஊரில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமி தோல்வி அடைந்திருக்கிறார்.

இதனால் தனது தோல்விக்கு வக்கீல் செம்மலை தான் காரணம் என நினைத்து கோபமடைந்த அவர் தனது மனைவி, மகன் மற்றும் ஆதரவாளர்களுடன்  சேர்ந்து செம்மலையின் வீட்டிற்குள் புகுந்து வீட்டின் கதவை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செம்மலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் ராமசாமி உள்பட 13 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |