கோயம்புத்தூரில் பஸ்ஸில் தொங்கிய மாணவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கபட்டத்தை கண்டித்து கல்லூரியை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் to கோயம்புத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று காலை 9 மணியளவில் சூலூர் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது சூலூர் பகுதியை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் பேருந்து பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்டது. அப்பொழுது படியில் சில மாணவர்கள் கம்பியை பிடித்தவாறு தொங்கிக் கொண்டே இருந்ததால் பிற பயணிகள் பேருந்தில் உள் நுழைய முடியாமல் தவித்தனர். இதைப் பார்த்த கண்டக்டர் மாணவர்களை பேருந்தினுள் ஏறுமாறு வற்புறுத்தினார். அவரது பேச்சை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் அவர்களை கண்டித்தார். இதனால் மாணவர்களுக்கும்,
கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட மாணவர்களில் ஒருவன் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார். இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது. பின் கண்டக்டரை தாக்கிய மாணவன் பேருந்திலிருந்து இறங்கி கல்லூரிக்குள் ஓடி கல்லூரி வாசல் கதவையும் நண்பர்களுடன் சேர்ந்து சாத்தி விட்டான். இதையடுத்து கண்டக்டரை தாக்கிய மாணவன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டக்டர் ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று அளித்த உத்தரவின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.