Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் அறைக்கு சென்ற நபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இயக்குபவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டார் அறைக்குக்கு மணிவண்ணன் வந்துள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மணிவண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிவண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சுந்தர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு தற்போது மணிவண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |