லண்டனுக்கு, அமெரிக்க நாட்டின் Philadelphia என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் நாடுகளின் விமான நிறுவனங்கள் மட்டும் தான் லண்டன் Heathrow மற்றும் Philadelphia சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்ந்து விமான சேவை அளித்து வந்தது. அமெரிக்காவின் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாத கடைசியில், லண்டனுக்கு செல்லக்கூடிய விமான சேவையை மீண்டும் தொடங்கியிருந்தது.
இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பிரிட்டன் செல்லும் போது, விமானம் புறப்படுவதற்கு சுமார் 48 மணி நேரங்களுக்கு முன்பாக, பயணிகள் இருப்பிடத்திற்கான படிவங்களை நிரப்ப வேண்டும். அடுத்ததாக, பிரிட்டன் சென்ற பின், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு அதற்குரிய பணத்தை கொடுக்க வேண்டும்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், பிரிட்டன் செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்பின்பு, பிரிட்டன் சென்றவுடன் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.