Categories
தேசிய செய்திகள்

டீ கடைக்குள் புகுந்து நகை பணம் திருட்டு…. விஜயதசமி விடுமுறை அன்று அரங்கேறிய சம்பவம்….!!!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு ஒரு டீ கடைக்குள் புகுந்து பணம் மற்றும் நகையை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மார்க்கெட் வீதியில் அன்பழகன் மற்றும் பாலாஜி என்ற இருவரும் தனித்தனியே டீக்கடை நடத்தி வருகின்றனர். ஆயுதபூஜை என்பதால் அவர்கள் இருவரும் டீ கடையை சுத்தம் செய்து பூஜை செய்துவிட்டு பின்னர் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அதிகாலை இருவரும் தங்கள் கடைகளுக்கு சென்று கடையை திறந்து பார்த்தபோது அன்பழகனின் கடையில் பின்புறம் இருந்த மேஜை டிராயரை உடைக்கப்பட்டு அதில் இருந்த 18,000 திருட்டு போயிருந்தது.இதேபோல் பாலாஜி கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 9 கிராம் தங்க நகை மற்றும் 65 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு பட்டிருந்தன.

இது குறித்து இருவரும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருச்செந்தூர் அருகே உள்ள பூக்கார தெருவை சேர்ந்த தங்கமுத்து என்பவர் தான் டீ கடைகளில் புகுந்து திருடியது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட தங்கமுத்து மீது பல மாநிலங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறினர்.

Categories

Tech |