Categories
தேசிய செய்திகள்

ஐயா… அது பூனை இல்ல புலி… பூனை என நினைத்து புலியைப் பிடித்த அரசியல் பிரபலம்… வைரலாகும் வீடியோ…!!!

“கயிறு என நினைத்து பாம்பை பிடித்தார்” என்ற கதை போல் பூனை என நினைத்து புலியை பிடித்துள்ளார் ஒரு அரசியல் பிரபலம்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ராகவரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டம் நஹ்கலப்பள்ளி கிராமம் வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே தலையில் பானை சிக்கிக் கொண்ட நிலையில் பூனை ஒன்றை கண்டுள்ளார்.

இதையடுத்து பூனையின் தலையில் சிக்கி இருந்த பானையை விடுவிக்க எண்ணி ஓடிச் சென்று அந்தப் பூனையைத் தூக்கி உள்ளார். அதை கொஞ்சம் முனைப்பில் தூக்கி அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அது பூனை அல்ல புலி. சிறுத்தை புலி என்று உணர்ந்த அவர் உடனடியாக அங்கேயே அதைப் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |