Categories
தேசிய செய்திகள்

புலிய பாத்து கரடி தான பயப்படும்… ஆனா இங்க தலைகீழா இருக்கே… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக வனப்பகுதியில் புலி ஒன்று கரடியை பார்த்து பயந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது அந்த சுற்றுலா பயணிகள் ஒரு வினோத சம்பவத்தை ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர். அதாவது, பந்திப்பூர் வனப்பகுதியில் புலி ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது.

அப்புலியின் எதிரே கரடி ஒன்று வந்தது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் கரடியை, புலி வேட்டையாடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக, புலியை பார்த்ததும் அந்த கரடி, தான் சண்டைக்குத் தயார் என்று கூறுவது போல திமிரி எழுந்து நின்றது. இதனைப் பார்த்த புலி, கரடியை பார்த்து கீழே படுத்த படி வாலாட்டியது. இந்நிகழ்வைக் கண்ட சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் கேமரா மற்றும் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |