ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேவதானம் ஏரியில் ஆண் சடலம் கிடந்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டுள்ளனர். அதன்பின் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருமலைச்சேரி கிராமத்தில் வசிக்கும் நாகராஜன் என்பதும், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அவரின் குடும்பத்தாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.