Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 25% போனஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு எத்தனை சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தாமாக தலைவர் ஜிகே வாசன் தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டு காலமாக அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து காரியங்களான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், மின்சாரம், தேயிலை வாரியம், கதர் வாரியம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் சர்க்கரை ஆலை போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு இந்த ஆண்டு அவர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸாக 25% கொடுக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அரசு பரிசீலனை செய்து நல்ல முடிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |