ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கவுந்தம்பாடி பகுதியை அடுத்த பெருமாள் ஆலய தெருவை சேர்ந்தவர் பட்டத்தரசன். இவர் தனது மனைவி அமராவதி அமராவதியின் தங்கை சாந்தி மற்றும் உறவினர்கள் உட்பட மொத்தம் 20 பேருடன் சரக்கு ஆட்டோவில் உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கவுந்தம்பாடி பகுதியை அடுத்த வளைவு ஒன்றில் சரக்கு ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர், அவரது மனைவி அமராவதி அவரது தங்கை சாந்தி உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். பின் அருகில் இருந்தோர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் காவல்துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் அளிக்க பட வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.