ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவனிப்பட்டி பகுதியில் ராஜேஸ்வரி, ஆனந்த வாணி என்ற பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரியும், ஆனந்த வாணியும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் மடப்புரம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது.
மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற பாண்டியராஜன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரியும், பாண்டியராஜனும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.