சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவாரம்பட்டி பகுதியில் இருக்கும் மளிகை கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவியர் என்பவர் தனது கடையில் குட்கா, பான் மசாலா என 135 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பிறகு சேவியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 135 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.