பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ம் தேதி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள சன் டிவி பிகில் படத்தை அதே நாளில் ஒளிபரப்பு செய்தது. இதனால் விஜய் ரசிகர்களும் பிக்பாஸ் ரசிகர்களும் எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறினார்கள் என்றே கூறலாம்.
அதேநேரம் நெட்டிசன்கள் பலர் எது டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அன்றைய நாளில் டிஆர்பி ரேட்டிங்கை அதிகமாக பெற்றது எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி விஜய் நடித்த பிகில் படம் தான் சன் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் உயரத்தில் வைத்து வெற்றி பெறச் செய்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.