Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காணாமல் போன மாணவன்…. தடயமாக கிடைத்த ஆடை…. போலீஸ் விசாரணை….!!

குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவாக்கரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையம் அருகாமையில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது பாட்டியிடம் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் ஜீவாவின் பெற்றோர் பல பகுதிகளில் தேடிய நிலையில் பாட்டி வேலை பார்க்கும் பகுதியில் இருந்த கிணற்றின் அருகில் அவரது ஆடைகள் இருந்ததை பார்த்துள்ளனர். இது பற்றி ஜீவாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன மாணவன் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் பாட்டி வேலை செய்யும் தோப்பில் இருக்கும் கிணற்றில் ஜீவா சடலமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்திருந்த நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |