பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் போட்டி போட்ட நிலையில், அவர்கள் சண்டை போடும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பிராஜ் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு பிரைமரி பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்துள்ளது. இந்த பதவிக்கு அப்பணியில் பணியாற்றிவந்த சிவசங்கர் கிரி மற்றும் ரிங்கி குமாரி ஆகியோர் போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருவரில் யாருக்கு தலைமை ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பதற்காக அவர்களின் ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியுள்ளனர். இருவரும் மோத்ஹரி டவுண் பகுதியில் உள்ள கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்று ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளனர். பின்னர் அங்கு யார் சீனியர் என்பதற்கான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
https://twitter.com/aanirbanbh/status/1448638831587049478
இதனை தொடர்ந்துசிவசங்கர் கிரிக்கும் ரிங்கி குமாரியின் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இவர்களின் சண்டை WWE போட்டியில் வருவது போலிருந்தது. இவர்களை பிரித்து விடுவதற்கு பலரும் முயற்சித்த நிலையில் முடியவில்லை. இந்த சண்டையை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தலைமையாசிரியர் பதவிக்காக இருவர் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.