Categories
அரசியல்

5 மாசம் தான ஆகுது…! கையில வேப்பிலையை வச்சி ஆடுவாங்க…. சீமான் பரபரப்பு குற்றசாட்டு…!!!

ராமச்சந்திர ஆதித்தனார் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று முதல்வர் ஐயா அவர்கள் சொல்லுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 5 மாதத்தில் இவ்வளவு சேவைகளை நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என்று சொல்லி ஏன் களத்தில் இறங்கி வாக்கு கேட்க வில்லை? அதற்கு பதில் இருக்கிறதா?

மக்களை சந்திப்பதற்கு உங்களுக்கு பயம் இருக்கிறது. 5 மாதங்களில் கிடைத்த சாதனை என்று சொன்னால் அந்த சாதனையை சொல்லி மக்களிடம் ஏன் வாக்கு கேட்கவில்லை. வாக்குக்காக மூக்குத்தி, தோடு, 20 கிலோ அரிசி, பட்டு புடவை, 1000 ரூபாய் எல்லாம் கொடுத்தீர்களா? இல்லையா? இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு வெற்றி என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இது உண்மையான வெற்றி கிடையாது பொய் வெற்றி. இப்போதுதானே ஐந்து மாதங்கள் ஆகி இருக்கிறது இன்னும் 4 1/2 ஆண்டுகள் இருக்கிறது எல்லாம் முடியட்டும் அப்புறம் பாருங்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கையில் வேப்பிலை வைத்து கொண்டு ஆடுவார்கள் அப்போது தெரியும்” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |