2021-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது .
ஒவ்வொரு வருடமும் உலகின் பாதுகாப்பு மிக்க நாடுகளின் பட்டியலை மதிப்பெண்களின் அடிப்படையில் Global Peace Index வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து குறித்த நிறுவனம் இதனை ஆய்வு செய்த பின் தன்னுடைய இணையபக்கத்தில் குறிப்பிட்டு வருகிறது. அதன்படி Global Peace Index பட்டியலில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு நாடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் ஆபத்தானது என்பதை தீர்மானம் செய்ய 23 வெவ்வேறு காரணங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அவற்றில் முக்கியமாக அந்நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு மோதல், சமூக பாதுகாப்பு, இராணுவமயமாக்கல் போன்றவை அடங்கும்.
மேலும் உள் மற்றும் வெளிப்புற வன்முறை மோதல்களின் எண்ணிக்கை, அவநம்பிக்கை நிலை, அரசியல் உறுதியற்ற தன்மை, பயங்கரவாத செயல்களுக்கு சாத்தியம், கொலைகளின் எண்ணிக்கை, இராணுவ செலவுகள் போன்றவையும் இதில் கணக்கிடப்படும். அதன்படி பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் காணப்படுகிறது. எனவே பாதுகாப்பு குறையாத ஒரே கண்டமாக ஐரோப்பா கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் நோர்டிக் நாடுகளான நோர்வே, ஸ்வீடன் டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து போன்ற நாடுகள் முதல் 25 இடங்களில் இருக்கிறது. இந்த நாடுகளில் கொலை விகிதம் 1,00,000 நபர்களில் 0.8 சதவீதம் பேர் மட்டுமே பதிவாகி உள்ளது.
இதனால்தான் டாப் 10 இடத்தில் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1-வது இடத்தில் ஐஸ்லாந்து, 2-வது இடத்தில் டென்மார், 3-வது இடத்தில் நியூசிலாந்து இடம் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிரித்தானியா 41-வது இடம், பிரான்ஸ் 47-வது இடம், கனடா 12-வது இடம், ஜெர்மனி 23-வது இடம், இலங்கை 145-வது இடம் மற்றும் இந்தியா 144 -வது இடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு உலகில் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான டாப் 10 நாடுகளின் பட்டியல்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, நோர்வே, ஆஸ்திரியா , ஸ்லோவேனியா, ஜப்பான்,கத்தார், பின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடம் பிடித்துள்ளது.