பிரான்சில் சுற்றித் திரியும் மர்ம மிருகத்தை பொதுமக்கள் பார்த்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் Frevent மற்றும் Auxi-Le-Chateau நகரங்களுக்கு இடையே கடந்த புதன்கிழமை அன்று மர்ம மிருகம் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. ஆனால் அந்த மிருகம் குறித்து இதுவரை எந்த அடையாளமும் காணப்படவில்லை. இதன் காரணமாக உள்ளூர் வேட்டைக்காரர்களின் உதவியுடன் தேசிய ஜொந்தமினர் அந்த மிருகத்தை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே அந்த மிருகம் சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் அது இராட்சத உருவத்தில் இருந்ததால் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்தேகப்படும்படி ஏதேனும் மிருகம் சுற்றித் திரிவது பொதுமக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.