Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக அடித்த காற்று…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அதிவேகமாக அடித்த காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரா மேட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரா மோட்டூர் கிராமத்தில் மாலை நேரத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அதன்பின் கூலி தொழிலாளியாக வேலை செய்யும் மணி தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது காற்று அதிவேகமாக வீசியதில் மின்சார கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மின்கம்பிகள் தாழ்வாக செல்வது பற்றியும் மற்றும் அறுந்து விழும் நிலையில் இருப்பதனால் மின்வாரியத்திற்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் ஊழியர்கள் எடுக்காததால் இந்த உயிரிழப்புக்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Categories

Tech |