சிறிய பாம்பை கட்டு விரியன் பாம்பு விழுங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கோண்டூர் பகுதியில் ஒருவருடைய வீட்டு முன்பக்க வாசலில் இரண்டுப் பாம்புகள் சீறி சண்டைப் போட்டுள்ளது. இதன் சத்தம் கேட்டதும் வீட்டு உரிமையாளர் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அதன்பின் அவர் அந்த இரண்டு பாம்பையும் அங்கிருந்து துரத்தி விட்டுள்ளார். இருப்பினும் அந்த இரண்டு பாம்புகள் வீட்டு வாசல் அருகாமையில் இருக்கும் மாடி படிக்கட்டு சென்றுள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் பாம்பு வீரர் செல்வாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற செல்வா என்பவர் கட்டுவிரியன் பாம்பானது நழுவ பாம்பை வாய்க்குள் விழுங்கியதை பார்த்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து பொதுமக்கள் அந்த பாம்பை தங்களுடைய மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அதன்பின் பாம்பை முழுவதுமாக விழுங்கிய பின் செல்வா அதைப்பிடித்து பாதுகாப்புடைய இடத்திற்கு எடுத்து சென்று விட்டுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இம்மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் பாம்புகள் இரையை தேடி குடியிருப்பு பகுதிக்குள் வர தொடங்கி இருக்கிறது. மேலும் பிடிக்கப்பட்ட கட்டுவிரியன் பாம்பானது 4 அடி நீளமும், அது விழுங்கிய நழுவு பாம்பானது 2 அடி நீளமும் இருந்துள்ளது. இத்தகைய பாம்பானது அப்பகுதியில் பிடிக்கப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.