தமிழகத்தில் ஒன்று வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அக்டோபர் 21ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி அணுகுவது, இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை எவ்வாறு பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அக்டோபர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.