Categories
உலக செய்திகள்

ரொம்ப மாறிட்டாங்க…! ”பழைய மாதிரி இல்ல”… வாக்கு கொடுத்த தலிபான்கள்… வாழ்த்தும் உலக நாடுகள்…!!

ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி என தலிபான்கள் உறுதி அளித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி விட்டு தலிபான்கள் ஆட்சி நடத்துகிறார்கள். அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் 1996 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சியில் இருந்ததைப் போல பெண்களுக்கு கல்வி மறுப்பு, பெண்கள் வேலைக்கு செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என அதிருப்தி எழுந்தது. ஆனால் பெண்களுக்கு ஆட்சியில் சம உரிமை  இருக்கும் என தலிபான்கள் அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து முன்னாள் தலிப்பான்கள் ஆட்சியில் இருந்ததைப் போல பெண்களுக்கு  கட்டுப்பாடு இருக்கக்கூடாது,  பெண்களை மதிக்க வேண்டும் என்றெல்லாம் பல உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர் ஓமர் அப்தி ஆப்கானிஸ்தானுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தலிபான்களை சந்தித்து பேசியது குறித்து தெரிவித்தார்.

அதில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறுமிகள் அனைவரும் விரைவில் மேல்நிலைக் கல்வி கற்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தலிபான்கள் உறுதி அளித்ததாக தெரிவித்தார். அனைத்து சிறுமிகளும் ஆறாம் வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர வசதியாக கட்டமைப்புகளை தலிபான்கள் உருவாக்கி வருவதாகவும், இன்னும் சில மாதத்துக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என தலிபான்கள் தெரிவித்ததாக யூனிசெஃப் துணை நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். தலிபான்களின் இந்த முடிவு உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |