ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹஸ்ரத்துல்லா ஸசாய்(9), அஹ்மதி(5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின் களமிறங்கிய ரஹ்மட் ஷா, அலி கில் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இவர்கள் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.இதில் ரஹ்மட் ஷா 61 ரன்களிலும், அலி கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருந்த போதும் அணியின் சீனியர் வீரரான ஆஸ்கர் ஆப்கான் இறுதி வரை போராடி தனது பங்கிற்கு 35 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர், சேஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அதன் பின் தற்போது 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
Afghanistan have collapsed from 191/6 to 194 all out!
What a performance from West Indies in the field 👏
Can Rashid Khan's men rally in the chase?#AFGvWI 👇https://t.co/Lh3MmRH3d0 pic.twitter.com/7pjuhaguuX
— ICC (@ICC) November 6, 2019