தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பிற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு தலைநகர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை சந்தித்து பேசினார். இந்த கலந்துரையாடலில் உலகம் எதிர்கொண்டுவரும் பருவநிலை மாற்ற பிரச்சனையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் தடுப்பூசித் திட்டங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. இதற்கு உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கொண்டு தடுப்பூசி திட்டம், பிற நாடுகளுக்கு தடுப்பூசி கொடுக்கும் இந்தியாவின் பங்களிப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.