Categories
டெக்னாலஜி பல்சுவை

50, 60 எல்லாம் இல்ல… நூறுதான்! ஃபோன் கேமராவில் சதம் விளாசிய மீ …!!

சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அடுத்தடுத்து தனது தகவல் சாதங்களை வெளியிட்டுவருகிறது.

Image result for Mi Note 10 Event

இந்த நேரத்தில் மொபைல்போன் சந்தையில் முதன் முறையாக 147 மெகாபிக்சல்கள் கொண்ட ஐந்து (Penta Camera) பின்பக்கப் படக்கருவியுடன் குறைந்த விலையில் மி 10 ப்ரோ (Mi Note 10) தகவல் சாதன சந்தையில் இன்று காலடி எடுத்து வைக்கவிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மீ வாட்ச் (Mi Watch), மீ டிவி 5 ப்ரோ (Mi Tv 5 Pro) ஆகிய தகவல் சாதனங்களும் இன்று ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள மி நிகழ்வில் (Mi Event) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு யூ ட்யூப், சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Mi Note 10 Event, 108 Megapixel Camera Set to Launch, Mi Watch, Mi tv 5 Pro, மீ நோட் 10 அம்சங்கள், Mi Note 10 Specifications, மீ வாட்ச் அம்சங்கள், Mi Watch Specifications, மீ டிவி 5 ப்ரோ அம்சங்கள், Mi tv 5 Pro Specifications

மீ நோட் 10 சிறப்பம்சங்கள் (Mi Note 10 Specifications):

  • நிறங்கள் (Colour): பச்சை (Aurora Green), வெள்ளை (Glacier White), கறுப்பு (Midnight Black)

 

  • சேமிப்பு (Storage): 64 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 6 ஜிபி ரேம், 256 ஜிபி / 8 ஜிபி ரேம்

 

  • அளவு: 157.8 x 74.2 x 9.7 மிமீ (6.21 x 2.92 x 0.38 in)

 

  • திரை (Display): 6.47 அங்குல சூப்பர் அமோலெட் தொடுதிரை, 1.6 கோடி நுட்ப வண்ணங்கள் (6.47 inches, Super AMOLED capacitive touchscreen, 16M colors)

 

  • காட்சித் தரம் (Display Quality): 1080 x 2340 பிக்சல்கள், 19.5: 9 விகிதம், ~ 398 பிபிஐ அடர்த்தி (1080 x 2340 pixels, 19.5:9 ratio, ~398 ppi density)

 

  • வன்பொருள் (Hardware): குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 / 730 ஜி (8 என்.எம் சிறிய அளவு சிப்செட்) / ஆக்டா கோர் (2×2.2 GHz கிரையோ 470 தங்கம் & 6×1.8 GHz கிரையோ 470 வெள்ளி) / அட்ரினோ 618 (Qualcomm SDM730 Snapdragon 730G (8 nm) / octa-core (2×2.2 GHz Kryo 470 Gold & 6×1.8 GHz Kryo 470 Silver / Adreno 618)

 

  • பின்பக்க படக்கருவி (Primary Camera): ஐந்து 108 மெகா பிக்சல் (f/1.7 அப்ரச்சர்) நிலையான ஒளிப்பட வசதி- ஓஐஎஸ் (optical image stabilization- OIS), 5 மெகா பிக்சல் டெலிஃபோடோ (f/2.0 அப்ரச்சர்) ஓஐஎஸ், 12 மெகா பிக்சல் டெலிஃபோடோ (f/2.0 அப்ரச்சர்),

 

  • 20 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் (f/2.2 அப்ரச்சர்), 2 மெகா பிக்சல் மேக்ரோ (f/2.4 அப்ரச்சர்)

 

  • முன்பக்க படக்கருவி (Secondary Camera): 32 எம்பி ட்ரு டெப்த் (f/2.0 அப்பெர்சர்)

 

  • இட அமைப்பு (Location): ஜி.பி.எஸ்./ஜி.என்.என்.எஸ். (GPS/GNSS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வைஃபை, கலிலியோ (GALILEO), பிடிஎஸ் (BDS)

 

  • உணரிகள் (Sensors): தொடுதிரை கைரேகை பாதுகாப்பு வசதி, ஃபேஸ் ஐடி, பேரோமீட்டர் எனப்படும் காற்றழுத்தமானி, 3 அக்சிஸ் கைரோ, அக்செலெரோமீட்டர், ப்ரொசிமிட்டி, ஆம்பியென்ட் லைட், என்.எஃப்.சி (NFC)

 

  • இயங்குதளம் (Operating System): ஆண்ட்ராய்டு பை 9.0 (Android 9.0 (Pie) எம்ஐயுஐ11 உடன் (MIUI 11)

 

  • மின்கலத் திறன் (Battery): 5260 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் திறன் (Li-Po 5260 mAh battery)

 

  • சார்ஜ்: 30W மூலம் 58% சார்ஜ் வெறும் 30 நிமிடத்தில்

 

  • விலை: ரூ. 35,000 முதல் (எதிர்பார்க்கப்படுகிறது)

 

  • எடை: 208 கிராம்

Categories

Tech |