சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது.
‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அடுத்தடுத்து தனது தகவல் சாதங்களை வெளியிட்டுவருகிறது.
சியோமி நிறுவனம் சீனாவில் புதிய சியோமி மீ டிவி 5 ப்ரோ (Mi TV 5 Pro), சியோமி மீ டிவி 5 (Mi TV 5) ஆகிய தொலைக்காட்சி பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவிக்கள் சர்வதேச சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீ டிவி 5 – 5 ப்ரோ சிறப்பம்சங்கள் (Mi tv 5 Pro Specifications)
- 55”, 65”, 75” ஆகிய மூன்று ரகங்கள்
- குவாண்டம் டாட் 4கே ஓஎல்இடி திரை (மி டிவி 5 ப்ரோவில் மட்டும் )
- மீ 4 டிவியை விட சிறிய அளவு பட்டைகள் (Small bezel compared to Mi 4 Tv)
- 4 ஜிபி ரேம் / 64ஜிபி சேமிப்பு (மி டிவி 5 ப்ரோ) | 3 ஜிபி ரேம் / 32ஜிபி சேமிப்பு (மீ டிவி 5)
- 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் குவாட்-கோருடன், மாலி-ஜி 31 வன்பொருள் உள்ளடக்கம்
- 2 x 8வாட்ஸ் ஸ்டீரியோ ஒலிப்பெருக்கிகள் (டால்பி அட்மோஸ், டிடிஎஸ் சரவுண்ட் ஆதரவுடன்)
- வைஃபை, புளூடூத், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் ஆதரவு
விலை:
- 55 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.37,350*
- 65 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.50,450*
- 75 அங்குல சியோமி மீ டிவி 5 ப்ரோ ரகத்தின் விலை ரூ.1,00,900*