Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் விற்பனை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சில்லறை வணிகர்கள் மற்றும் கடைகளுக்கு பாட புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதை அடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பள்ளிகள் திறப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பாடங்களை தொடங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய சட்டப்படி பதிவு செய்த வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பதிவு செய்த வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனுமதிக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்காக விருப்பமுள்ள வணிகர்கள் http://texbookcorp.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |