தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். எதிர்த்துப்பேசி வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும்.
பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்காக செலவு செய்வீர்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். இன்று தனவரவு வருவதில் காலதாமதம் உண்டாகும். இன்று இறைவழிபாடு கண்டிப்பாக தேவை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.