சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் சாலையில் வேன் கவிழ்ந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம் பகுதியில் வசிக்கும் 11 நபர்கள் ஒரு வேனில் தர்மபுரியில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஒகேனக்கல்லில் இருக்கும் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.