பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக இந்தியாவிடம் 3,600 கோடி ரூபாயை இலங்கை கடனாக கேட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெயை மத்தியகிழக்கு நாடுகளில் இருந்தும், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இலங்கை இறக்குமதி செய்து வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட பணம் செலுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே பெட்ரோல் டீசல் வாங்கும் அளவுக்கு அந்நாட்டின் பொருளாதார நிலவரம் உள்ளது.
இந்நிலையில் இந்தப் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக இலங்கை இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாயை கடனாக கேட்டுள்ளது. இதனை இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சுமித் விஜேசிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்: இந்தியா-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்படி 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குவது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தொகை தங்களது கிடைத்தால் மட்டுமே பெட்ரோல் டீசலை கொள்முதல் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடன் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.