20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அனுபவமிக்க வங்கதேச அணியை ஸ்காட்லாந்து அணி தோற்கடித்தது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் கிறிஸ் கிரேவ்ஸ் 45 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
141 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி வீரர்களுக்கு ஸ்காட்லாந்து வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.அந்த அணியில் முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுக்க மற்றவர்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேச அணி 6 ரன்களில் தோல்வியை தழுவியது